Monday, June 20, 2011

தமிழீழம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு துணை நிற்போம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

சைதாப்பேட்டை
தேரடி திடலில் நேற்று இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது எந்த நாடும் கண்டு கொள்ளவில்லை.

சட்டமன்ற
தேர்தலின் போது இரட்டை இலை துளிர்த்தால் ஈழம் மலரும் என்று நான் பிரசாரம் செய்தேன்.பலர் என்னை பார்த்து ஏளனம் செய்தார்கள்.இன்று நாம் நினைத்தது போல, ஜெயலலிதா முதலமைச்சராகி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.

8
கோடி தமிழக மக்களின் பிரதிநிதியான முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை ஒரு அமைச்சரை வைத்து முன்மொழிய சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஈழத் தமிழர்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் கருதி சட்டமன்றத்தில் அவரே தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார்.துணிச்சல் மிக்க பெண்மணி அவர்.

இதற்காக
நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது.புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானர்.அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும்.

சட்டமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்த போதும் ஜெயலலிதா வற்புறுத்தினார்.இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதற்காக அவர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம்.அவரது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.

 
இலங்கை தமிழர் பிரச்னையில் இன்று ஜெயலலிதா நாடகம் ஆடுவதாக கருணாநிதி கூறுகிறார்.இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தவர் அவர் இது போன்ற ஒரு நாடகத்தை கூட அவர் நடத்திக் காட்டவில்லையே?
ஜெயலலிதாவை பொறுத்தவரை எந்த காரியத்தில் இறங்கினாலும் அதனை நிறைவேற்றாமல் விடமாட்டார்.தமிழ் ஈழத்தையும் அவர் பெற்றுத் தருவார்.இதற்காக இறுதிவரை நாங்கள் உங்களுக்கு உறு துணையாக இருப்போம்.


இவ்வாறு சீமான் பேசினார்.

No comments:

Post a Comment