Tuesday, May 1, 2012

அசல்கள் அடங்கிக் கிடப்பதும் நகல்கள் நாட்டாண்மை செய்வதும். புலமைப்பித்தன்


நெஞ்சமும் இல்லாமல்; நீதியும் இல்லாமல் இருக்கிறவர்கள் எல்லாம் நெஞ்சுக்கு நீதிஎன்று சுயசரிதம் எழுதிக் குவிக்கிறார்களே!

அதனால்தான் நெஞ்சத்துக்குள்ளேயே இருட்டில் கிடந்த ஒரு சிலவற்றையாவது வெளிச்சத்துக்கு கொண்டுவர நினைத்து எழுதுகிறேன்.

அசல்கள் அடங்கிக் கிடப்பதும் நகல்கள் நாட்டாண்மை செய்வதும் எல்லாக் காலங்களிலும் நடைபெறும் காரியம்தானே!


தமிழ் ஈழப் பிரச்னை காரணமாக என்னை ஆளாக்கிவிட்ட அன்புத் தலைவரும் நானும் எந்த அளவுக்கு எதிரெதிர்த் துருவங்களாக நிற்க வேண்டியிருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அந்த மன்னாதிமன்னனை... துன்பப் படுத்த நேர்ந்த நேரங்களில் என் மனம் எப்படி வலித்தது; எப்படித் துடித்தது என்பதை எல்லாம் இன்றுபோய் நான் அவரிடமா சொல்லமுடியும்!

ஏறத்தாழ 80 ஆம் ஆண்டில் இருந்து இறுதிவரை அந்த மனிதனுக்கு நான் தீராத தொல்லைகளையே கொடுத்துவந்திருக்கிறேன்.

ஆனால் அத்தனை தொல்லைகளையும் அவர் தாங்கிக் கொண்டார். ஒரு நாள் கோபித்தார்... ஒரு நாள் சண்டை போட்டார். ஒருநாள் அந்த மனிதனே என்னை சமாதானப்படுத்தினார். அப்படிப்பட்ட சம்பவங்கள் ஒன்றா இரண்டா! எதை எதை நான் சொல்ல, எதை எதைச் சொல்லாமல் தள்ள! இந்த ஏழைப் புலவன் மீது ஏன் அவர் அத்தனை அன்பு வைத்தார்!

நான் தொல்லை தந்தும் ஏன் தாங்கிக் கொண்டார்? என்னையும் தாங்கிப் பிடித்தார். ஒரு சமயத்தில், என்னைக் கடிந்துகொண்டு அவர் என்ன சொன்னார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டும்! அவர் கேட்டார்...

‘‘உங்களது கொள்கை வெறிக்கு எல்லையே இல்லையா?’’ நான் சொன்னேன்...

‘‘பதவி வெறி இருந்தால் தவறு; பணவெறி இருந்தாலும் தவறு; கொள்கை வெறி இருந்தால் தவறா? கொள்கை வெறிக்கு என்ன உச்சவரம்பு?’’ அவர் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. மிகவும் நொந்துபோய்...
  
‘‘புலவரே... நீங்கள் இன்னும் சின்னப் பிள்ளை இல்லை. ஊர் உலகத்தில் அவனவன் கொள்கை பேசுகிறவன் எல்லாம் பத்து தலைமுறைக்கு, நூறு தலைமுறைக்கு சொத்து சம்பாதித்து வைத்துக் கொண்டு பேசுகிறான்! அப்படி நீங்கள் என்ன சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்? எனக்குள்ள கவலை எல்லாம் நான் உங்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறேன் என்பதுதான்’’என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் நேரம் மௌனமாக இருந்தார்.

அப்போது நெஞ்சுக்கு அந்த வலி தெரியவில்லை. எனக்காக அவரது மனம் எப்படித் தவித்தது என்பது புரியவில்லை. தான் பெற்ற பிள்ளைமீது ஒரு தந்தைக்குள்ள அக்கறையும் ஆற்றாமையும் இப்படித்தானே இருக்கும்! அந்த அக்கறையும் அந்த ஆற்றாமையும் என் மேல் தலைவனுக்கு இருந்தது.

உங்களை எப்படி நான் பாதுகாக்கப் போகிறேன்என்று இதயம் கனக்க என்னை நினைத்து கவலைப்பட்டாரே... அவருக்கும் எனக்கும் என்ன சொந்தம்? 
தலைவர்- தம்பி -நான் தொடரில் புலமைப்பித்தன்

Tuesday, April 3, 2012

மின் கட்டணத்தில் பெருமளவு குறைப்பு முதல்வர் அறிவிப்பு

சென்னை, ஏப்.3: ஏப்ரல் 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட மின்கட்டணத்தில் பெருமளவு குறைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:
நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் பயணிக்கும் வகையில், பொது நலன் பாதுகாக்கப்படுவதையும்; சமூக நலன் உச்ச நிலைக்கு கொண்டு செல்லப்படுவதையும்; லாபத்தை குறிக்கோளாகக் கொள்ளாமல், மக்களுக்கான சேவை நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு செயலாற்றுபவை தான் பொதுத் துறை நிறுவனங்கள். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை தங்கு தடையின்றி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் தமிழ்நாடு மின்சார வாரியம்.

எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சிக் காலத்தில், மின் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமளிக்காத வகையில்; இன்னும் சொல்லப் போனால், உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அளிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடு நன்றாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களான தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையங்கள் அவற்றின் செம்மையான செயல்பாடுகளுக்காக 2001-2002 முதல் 2005-2006 வரை பல்வேறு விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வந்தன. காற்றாலை மின் உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னிலை வகித்து வந்தது. இது மட்டுமல்லாமல், 2,518 மெகாவாட் அளவுக்கு மின் நிறுவு திறன் அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிர்வாகமும் சீராக இருந்தது.

ஆனால், முந்தைய தி.மு.க. ஆட்சியில், ஆண்டொன்றுக்கு சராசரியாக 8,000 கோடி ரூபாய்க்கு மேல், வருவாய்க்கும் செலவினங்களுக்கும் இடையே நிகர இடைவெளி ஏற்பட்டது. இதன் விளைவாக, 31.3.2012 நிலவரப்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தொடர் இழப்பு 50,000 கோடி ரூபாயையும்; வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் 45,000 கோடி ரூபாயையும் தாண்டியுள்ளது. இது தவிர, தனியார் மின் உற்பத்தியாளர் மற்றும் இதர ஒப்பந்ததாரர்களுக்கான நிலுவைத் தொகை 11,000 கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாடு மின்சார வாரியம் அளவுக்கு மீறிய கடன் சுமைக்கு ஆளாகி; வாங்கிய கடனையும் வட்டியையும் திரும்பச் செலுத்துவதற்கே கடன் வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில், அதாவது debt-trap நிலையில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மதிப்பீட்டு நிறுவனங்கள் மின்சார வாரியத்தின் மதிப்பை குறைத்துவிட்டதால், வெளிச்சந்தையில் இருந்தும் கடன் பெற வழியில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் அளிக்கக் கூடாது என பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட எனது தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, பல ஆண்டு இடைவெளிக்குப் பின் அனல் மின் நிலையங்கள் புதிய சாதனைகளை ஏற்படுத்தும் விதமாக மிகச் செம்மையாக செயல்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் இழப்பு அதாவது Transmission and Distribution loss விகிதமும், குறைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய, சராசரி மின் இழப்பான, 27 விழுக்காட்டினை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் மின் இழப்பு, 18 விழுக்காடு, என்ற அளவிலேயே உள்ளது.
 

நிதி உதவியைப் பொறுத்த வரையில், 2011-12 ஆம் ஆண்டுக்கான மானியத் தொகையாக 2,058.19 கோடி ரூபாயை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கியதுடன்; பங்கு மூலதனமாக 4,100 கோடி ரூபாயையும்; ways and means advance ஆக 1,455.16 கோடி ரூபாயையும்; ஆக மொத்தம் ஒரே ஆண்டில் இதுவரை வழங்கப்படாத அளவுக்கு 7913.45 கோடி ரூபாயை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. 2012-13 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக 3,068.78 கோடி ரூபாயும்; புதிய மின் திட்டங்களுக்கான பங்கு மூலதன உதவியாக 1,500 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, மின்சார சேமிப்பை ஊக்குவிக்கவும்; மின்சாரத்தை கொண்டு செல்வதிலும், விநியோகிப்பதிலும் ஏற்படும் இழப்புகளை மேலும் குறைக்கவும்; மின் பகிர்மான கட்டமைப்பை வலுப்படுத்தவும்; மின் திருட்டைக் கட்டுப்படுத்தவும்; சூரிய ஒளி மின்சக்தி திட்டங்கள்; காற்றலை திட்டங்கள்; பயோமாஸ் மின் திட்டங்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவும்; புதிய திட்டங்களை மாநில அரசு மூலமாகவோ அல்லது கூட்டு முயற்சிகள் மூலமாகவோ தொடங்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


 பாரத மிகுமின் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதாக இருந்த 1600 மெகாவாட் உடன்குடி உயர் அழுத்த நிலை அனல் மின் திட்டம் நான்கு ஆண்டுகளாக தொடங்கப்படாத நிலையில் இருந்ததால், அத்திட்டத்தை 8000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கிடையில், உற்பத்தி செலவு மற்றும் விநியோக வருவாய்க்கு இடையே உள்ள இடைவெளியை ஈடு செய்யும் வகையில், 9,741 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஏற்படும் வகையில், தற்போதுள்ள மின்சார கட்டணத்தை மாற்றக் கோரி தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பத்தின் மீது நுகர்வோரின் கருத்துகளை கோரி சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் ‘கருத்துக் கேட்பு’ கூட்டங்களையும்; மாநில ஆலோசனைக் குழு,   பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும், ஆலோசனைகளையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பெற்றது.
 

இதனையடுத்து, மின் கட்டண, விகித மாற்றம் குறித்த, தனது ஆணையை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 30.3.2012 அன்று வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, 7,874 கோடி ரூபாய், கூடுதல் வருவாய் கிடைக்கும்.
 

இருப்பினும், இந்தக் கட்டண உயர்வில், 1,118.44 கோடி ரூபாயை, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்க எனது தலைமையிலான அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க வேண்டிய மொத்த மானியத் தொகை ஆண்டொன்றிற்கு 3554.16 கோடி ரூபாய் ஆகும்.
தமிழக அரசின் இது போன்ற மக்கள் நலம் காக்கும் நடவடிக்கையின் மூலம், ஏழை, எளிய மக்கள் அடையும் பயன்களை நான் இங்கே எடுத்துக் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

1. குடிசைகளுக்கான மின் கட்டணத்தை யூனிட் ஒன்றிற்கு 2 ரூபாய் 50 பைசா என்று கணக்கிடப்பட்டு, மாதம் ஒன்றுக்கு கட்டணம் 60 ரூபாய் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளது. இதனை தமிழக அரசே முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. இதன் மூலம், 14 லட்சம் நுகர்வோர் பயன் பெறுவர்.

2. விவசாயத்திற்கான மின் கட்டணத்தை குதிரைத் திறன் ஒன்றிற்கு ஆண்டொன்றுக்கு 250/- ரூபாயிலிருந்து 1750/- ரூபாயாக மாற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இதன் மூலம் விவசாயிகள் மின் கட்டணம் ஏதும் செலுத்தாமலேயே மின்சாரத்தை தொடர்ந்து பெற்று வருவார்கள்.

3. இரு மாதங்களில் 100 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலையான யூனிட் ஒன்றிற்கு 2 ரூபாய் 60 பைசாவில், 1 ரூபாய் 50 பைசாவை தமிழக அரசு மானியமாக அளிக்கும் என ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய தொகை யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் 10 பைசா மட்டுமே.

4. இதே போன்று, இரு மாதங்களில் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலையான யூனிட் ஒன்றிற்கு 2 ரூபாய் 80 பைசாவில், 1 ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளதால்; பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய தொகை யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் 80 பைசா மட்டுமே.

5. இரு மாதங்களில் 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்களுக்கு, 201 முதல் 500 யூனிட்டுகளுக்கான மின் கட்டணத்தில், யூனிட் ஒன்றுக்கு 50 காசு மானியத்தை தமிழக அரசு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

6. வழிபாட்டுத் தலங்கள், விசைத் தறிகள் ஆகியவற்றிற்கான மானியங்களும் தொடர்ந்து அளிக்கப்படும்.


7. இவையன்றி, 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு அரசு தனியே மானியம் வழங்கவில்லை என்றாலும், மின் உற்பத்தி செலவை விட குறைவான கட்டணமே அவர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இந்த கட்டண உயர்விற்கு பின்னரும், வெளி மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது.
உதாரணமாக கர்நாடகாவில் இரண்டு மாதங்களில் 100 யூனிட் வரை உபயோகிப்பவர்கள் யூனிட் ஒன்றிற்கு சராசரியாக 2 ரூபாய் 59 காசும்; ஆந்திராவில் 2 ரூபாய் 3 காசும்; கேரளாவில் 1 ரூபாய் 30 காசும்; மேற்கு வங்காளத்தில் 3 ரூபாய்
55 காசும்; மகாராஷ்டிராவில் 2 ரூபாய் 47 காசும்; குஜராத்தில் 2 ரூபாய் 55 காசும்; உத்தரபிரதேசத்தில் 3 ரூபாய் 45 காசும் செலுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த கட்டண மாற்றத்திற்குப் பிறகும் தமிழ் நாட்டில் 100 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர் செலுத்த வேண்டிய கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 10 காசு மட்டுமே.
 

இதே போன்று, இரண்டு மாதங்களில் 200 யூனிட்கள் வரை உபயோகிப்பவர்களை ஒப்பிடும் போது; ஆந்திராவில் யூனிட் ஒன்றிற்கு சராசரியாக 2 ரூபாய் 81 காசும்; கர்நாடகாவில் 2 ரூபாய் 92 காசும்; மேற்கு வங்காளத்தில் 4 ரூபாய் 4 காசும்; மகாராஷ்டிராவில் 2 ரூபாய் 47 காசும்; குஜராத்தில் 2 ரூபாய் 85 காசும்; உத்திரபிரதேசத்தில் 3 ரூபாய் 45 காசும் செலுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் புதிய கட்டண விகிதப்படி, 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர் செலுத்த வேண்டிய கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 80 காசு மட்டுமே.
எனினும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணங்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது என்றும்; எனவே கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும், பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன.
 

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள கட்டணங்களை குறைக்க தமிழக அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றாலும், ஏழை, எளிய மக்களின் சுமையை மேலும் குறைக்கும் வண்ணம், வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை குறைக்கவும்; அதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதல் மானியம் வழங்கி, அந்தச் சுமையை தமிழக அரசே ஏற்றுக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி
,
1. இரு மாதங்களில் 100 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 10 பைசாவில் இருந்து 1 ரூபாயாக குறைக்கப்படும்.

2. இரு மாதங்களில் 200 யூனிட்டுகள் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம் யூனிட் ஒன்றிற்கு 1 ரூபாய் 80 பைசாவில் இருந்து 1 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும்


3. இரு மாதங்களில் 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்தும் வீட்டு மின் பயனீட்டாளர்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ரூபாயிலிருந்து 2 ரூபாய் என்றும்; 201 யூனிட் முதல் 500 யூனிட் வரையிலான கட்டணம் 3 ரூபாய் 50 பைசாவிலிருந்து 3 ரூபாய் என்றும் குறைக்கப்படும்.
 

எனது தலைமையிலான அரசின் இந்த மக்கள் நலன் காக்கும் நடவடிக்கை மூலம், 740 கோடி ரூபாய் மானியத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு எனது தலைமையிலான அரசு கூடுதலாக வழங்கும். இதனையடுத்து, இந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய மானியத் தொகை மிக உயர் அளவான 4,294.16 கோடி ரூபாயாக இருக்கும் என்பதையும், இதன் மூலம் 1 கோடியே 50 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Friday, February 3, 2012

பேரறிஞர் அண்ணாவின் 43-வது நினைவு தினம்.


எங்கள் தமிழன்னை எத்தனையோ தவமாய் தவமிருந்து...
திங்களாய்! செங்கதிராய்! திருநாட்டின் ஒளிவிளக்காய்!
வள்ளுவன் குரல் போல, வடிவமோ சிறிதாக!
அவர் உள்ளமோ இந்த உலகினும் பெரிதாக....
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்....
கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்! அண்ணாவென்றேல்லோரும் அழைக்கவந்தார்!
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார். அண்ணா.. அண்ணா..  எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.

Tuesday, January 17, 2012

Saturday, December 31, 2011

சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கடுமையான எச்சரிக்கை.

செய்த தருமம் தலை காக்கும். 
தக்க சமயத்தில் உயிர் காக்கும். 
கூட இருந்தே குழி பறித்தாலும்  . 
என்ற பாடல் வரிகளுக்கேற்ப 
இன்று நாடு  காக்கப்பட்டிருக்கிறது.

சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்,  கடுமையாக எச்சரிக்கை விடுத்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோடரி கதையைக் கூறி, தொண்டர்களுக்கு விளக்கம் அளித்தார்.


பொதுக்குழுவின் இறுதியில் அவர் பேசியதாவது: 

ஒரு முறை, மரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஆண்டவனிடம் மனு கொடுத்தனவாம். அதில், "இறைவா! எங்களை இரக்கமின்றி வெட்டிச் சாய்க்கும் கோடரிகளை இனி நீ தயாரிக்க அனுமதிக்காதே' என்றனவாம். உடனே ஆண்டவன் சொன்னாராம். "கோடரி தயாரிப்பதை நிறுத்தச் சொல்வதற்கு முன், நீங்கள், அந்தக் கோடரிகளுக்கு கைப்பிடி ஆவதை நிறுத்துங்கள். உங்களிடமிருந்து தானே கோடரிக்கு கைப்பிடிகள் தயாரிக்கப்படுகின்றன' என்றபோது, தலைகுனிந்து நின்றனவாம் மரங்கள். ஆக, தீதும் நன்றும் பிறர் தர வராது. 

அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கின்றனர்; குற்றம் புரிகின்றனர். அதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்படும் போது, 

ஒரு சிலர், "சரி! இனி நமக்கு அரசியல் வேண்டாம் என, சிலர் முடிவெடுப்பர். இன்னும் சிலர், "வேறு கட்சியில் போய் சேர்ந்து விடலாம்' என முடிவெடுப்பர். அதில் தவறேதுமில்லை. வாழ்க்கை இருக்கிற வரை வாழ்ந்தாக வேண்டும்.


இன்னும் சிலர் இருக்கின்றனர். தவறு செய்து, துரோகம் புரிந்து, கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச்சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு,

"நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம்; மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால், நாளை, நாங்கள் உள்ளே சென்ற பிறகு, உங்களை பழி வாங்கி விடுவோம். ஆகவே, எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்' என்று சொல்பவர்களும் உண்டு. 

அப்படி, தலைமை மீது சந்தேகம் வரும் அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு, நம்பி, அதன்படி செயல்படும் கட்சியினருக்கும் மன்னிப்பு கிடையாது. இவ்வாறு கடுமையாக எச்சரிக்கை விடுத்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா,   பேசினார்.

தொண்டர்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாகவும், மக்களிடம் நம்பிக்கை பெற கூடியதாகவும்  சந்தேகங்களை  போக்கியிருக்கிறது 

 புத்தாண்டு-2012 வாழ்த்துக்கள்.

Saturday, December 24, 2011

இதய தெய்வம் M.G.R. 24 ம் ஆண்டு நினைவு அஞ்சலி.

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. 

அவரது 24-வது ஆண்டு நினைவு நாள் 24.12.11


இதயம் என்பது ரோஜாவானால் நினைவே நறுமணம் ஆகும்
எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும். 
                                                         M.G.R.

Monday, December 19, 2011

ஒரு தவறு செய்தால் அது சசி&கோ என்றாலும் விடமாட்டேன்.

அம்மா அவர்கள் மிக மிகச் சரியான முடிவு எடுத்து இருக்கின்றார்கள். தாமதம் இல்லாமல் எந்த ஒரு முடிவு எடுப்பதிலும் அம்மாவுக்கு நிகர் அம்மாதான். இதன் மூலம் அ.தி. மு. கவை பிடித்து இருந்த சனி விலகியது என்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் இனி அ.தி.மு.க மிக்கப் பலம் வாய்ந்த தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்த தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். கட்சியில் எத்தகைய உயர் மட்டத்தில் இருந்தாலும், தனக்கோ கட்சிக்கோ அவர்களால் இடர் வரும் என்று தெரிந்தால் கட்சியில் இருந்தே விலக்க தயங்க மாட்டார்.நல்ல துணிச்சலான முடிவு ஆனால் மிகவும் தாமதமாக எடுத்த முடிவு

இவர்கள்தான்(சசி&கோ) கட்சிக்கு கெட்ட பெயர்கள் வர காரணமாக இருந்தவர்கள். இப்போதுதான் ADMK உண்மையான MGR அவர்களின் உண்மையான கட்சி, அவரது மறைவு தினத்தில் மக்களுக்கு கிடைத்த நல்ல செய்தி என்று சொல்லலாம், துணிந்து துணிவோடு மக்களுக்கு நல்லது யார் செய்தாலும், அது கடவுளுக்கு செய்யும் காரியமாகும் ,

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்.என்ற புரட்சித்தலைவர் பாடல் வரிக்கு சரியான சாட்சி இந்த சசி&கோ நீக்கம்.