Friday, August 12, 2011

அருள்மிகு எம்.ஜி.ஆர்.ஆலயம் கும்பாபிஷேகம்

 
சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கலை வாணன்.
தற்போது இவருக்கு, ஐம்பது வயதாகிறது.இவர், எம்.ஜி.ஆரை சிறுவயதில், மூன்று முறை தூரத்தில் இருந்து பார்த்துள்ளார்.  

பார்த்தது முதலே அவர் மீது இனம் புரியாத பாசம்; அந்த பாசம் நாளடைவில்பக்தியாகமலர்ந்தது.எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டும் ஐடியா வந்தது. கோவில் கட்டும் தன் எண்ணத்தை செயல்படுத்த துவங்கினார்.

எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.மனைவியின் நகையை விற்ற பணம், சேமிப்பு என தேறிய மூன்று லட்சம் ரூபாயை கொண்டு, திருநின்றவூர், நத்தம்மேட்டில், முக்கால் கிரவுண்டு இடம் வாங்கி, அதில் எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டினார். 

அக்கோவிலினுள் முன் மண்டபத்தில், ஆறடி உயரத்தில் எம்.ஜி.ஆரின் பளிங்கு சிலை வைத்துள்ளார். அதற்கு முன்பாக, அபிஷேகத்திற்காக, இரண்டு அடி உயரத்தில் கிரானைட் கல்லால் ஆன உற்சவர் சிலையையும் அமைத்துள்ளார்.

இக்கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடக்கிறது. "அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம், நத்தமேடு, செல்லியம்மன் சாலை, திருநின்றவூர்' என, முகவரி வெளியிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த பணத்தை போட்டு, ஏழு மாதமாக கட்டியதில் இப்போது அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

Related Post
அருள்மிகு எம்.ஜி.ஆர்., ஆலயம்

No comments:

Post a Comment